2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

பங்களாதேஷை வென்றது பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 16 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் உலக இருபதுக்கு-20 தொடரில், கொல்கத்தாவில், இன்று இடம்பெற்ற முதலாவது போட்டியில், பங்களாதேஷ் அணியைத் தோற்கடித்து பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இப்போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணித்தலைவர் ஷாகித் அப்ரிடி, தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 5 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பாக, மொஹம்மட் ஹபீஸ் 64 (42), அஹ்மெட் ஷெஷாட் 52 (39), ஷாகித் அப்ரிடி 49 (19) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக, தஸ்கின் அஹ்மெட், அரபாத் சுண்ணி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் சபீர் ரஹ்மான் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்று 55 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக ஷகிப் அல் ஹஸன் 50 (40) ஓட்டங்களையும் சபீர் ரஹ்மான் 25 (19) ஓட்டங்களையும் தமீம் இக்பால் 24 (20) ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக ஷாகித் அப்ரிடி, மொஹம்மட் ஆமீர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் இமாட் வசீம், மொஹம்மட் இர்பான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக ஷாகித் அப்ரிடி தெரிவானார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .