2021 மே 14, வெள்ளிக்கிழமை

ப்ரூசெல்ஸிலிருந்து போட்டி மாற்றம்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 24 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணிக்கெதிராக பெல்ஜிய கால்பந்தாட்ட அணி பங்குபற்றவிருந்த சிநேகபூர்வப் போட்டியொன்று, பெல்ஜியத் தலைநகர் ப்ரூசெல்ஸில் இடம்பெற்ற தாக்குதலையடுத்து, இப்போட்டியானது, ப்ரூசெல்ஸிலிருந்து லெய்றியா எனப்படும் போர்த்துக்கல்லிலுள்ள நகரத்துக்கு  மாற்றப்பட்டுள்ளது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக இப்போட்டியானது முதலில் நிறுத்தப்பட்டிருந்தாலும், அதன் பிறகு, போர்த்துக்கல் கால்பந்தாட்ட சங்கம், வேறொரு இடத்தில் போட்டியை நடாத்துவதற்கு ஆலோசனை வழங்கியிருந்தது.

இந்நிலையில், ஏற்கெனவே திட்டமிடப்பட்டது போன்று போட்டியானது எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (29) இடம்பெறவுள்ளது.

இதேவேளை கருத்து தெரிவித்த பெல்ஜிய கால்பந்தாட்ட அணியின் தலைவர் வின்சென்ட் கொம்பனி, இச்சம்பவங்களால், பேரச்சமும் கலகமுமடைந்ததாக தெரிவித்துள்ளார். ப்ரூசெல்ஸ் கண்ணியத்துடன் நடந்து கொள்ள தான் விரும்புவதாகவும் நாங்கள் அனைவரும் பாதிக்கப்பட்டதாகவும் ஆனால் நாங்கள் வெறுப்பை நிராகரிக்க வேண்டும் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .