2021 ஜூன் 14, திங்கட்கிழமை

ஸ்கொட்லாந்தை வென்றது இலங்கை

Editorial   / 2017 மே 24 , பி.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான பயிற்சி ஒருநாள் போட்டியொன்றில், ஸ்கொட்லாந்தை இலங்கை வென்றுள்ளது. 

பெக்கென்ஹாமில், நேற்று  (23) இடம்பெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற, இலங்கை அணிக்குத் தலைவராகக் கடமையாற்றிய உபுல் தரங்க, ஸ்கொட்லாந்தை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார். 

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து, 42.1 ஓவர்களில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், கிரேய்க் வொலஸ் 46 (60), மத்தியூ குறோஸ் 27 (42), அலஸ்டைர் இவான்ஸ் 22 (39) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், லக்‌ஷன் சந்தகான் 4, சீக்குகே பிரசன்ன, நுவான் குலசேகர ஆகியோர் தலா 2, திஸர பெரேரா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 167 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய இலங்கை, 22.5 ஓவர்களில், ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து, இலகுவாக வெற்றியிலக்கை அடைந்து, 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. துடுப்பாட்டத்தில், குசல் மென்டிஸ் ஆட்டமிழக்காமல் 74 (51), உபுல் தரங்க ஆட்டமிழக்காமல் 53 (63), நிரோஷன் டிக்வெல்ல 29 (23) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், வீழ்த்தப்பட்ட விக்கெட்டை, அலஸ்டைர் இவான்ஸ் கைப்பற்றியிருந்தார்.

முதலாவது பயிற்சிப் போட்டியில், ஸ்கொட்லாந்தை எதிர்கொண்ட இலங்கை, அதிர்ச்சியான முறையில் படுதோல்வி அடைந்திருந்த நிலையில், இந்தப் போட்டி முக்கியத்துவம் பெற்றிருந்தது 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .