Super User / 2010 செப்டெம்பர் 05 , மு.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் சல்மான் பட், வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் அமிர், மொஹமட் ஆசிவ் ஆகியோர் மஸார் மஜீத் என்பவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதை ஸ்கொட்லண்ட்யார்ட் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஆனால், அவர்கள் முறைக்கேட்டிலும் ஈடுபடவில்லை எனவும் பல்வேறு வணிக நிறுவனங்களுடனான விளம்பர ஒப்பந்தத்திற்காகவே இப்பணத்தைப் பெற்றதாகவும் அவ்வீரர்கள் தெரிவித்ததாக அவர்களின் சட்ட ஆலோசகர் டபாஸுல் ரிஸ்வி, பாகிஸ்தான் தொலைக்காட்சியொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
மஸார் மஜீத் சூதாட்ட முகவர் என்பதை தான் அறிந்திருக்கவில்லை எனவும் மேற்படி வீரர்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் குறித்த விளம்பர ஒப்பந்த ஆவணங்களையும் அதிகாரிகளிடம் காண்பித்ததாகவும் சட்டத்தரணி ரிஸ்வி தெரிவித்துள்ளார்.
3 hours ago
03 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
03 Nov 2025