2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

உலகக் கிண்ண போட்டியின்போது பயங்கரவாத தாக்குதல் நடத்த முயன்றவர் கைது: பாக். அமைச்சர்

Super User   / 2011 மார்ச் 24 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியின்போது தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட பயங்கரவாதியொருவரை கைதுசெய்திருப்பதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மலிக் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளார் மாநாடொன்றில், சர்வதேச பொலிஸ் அமைப்பான இன்டர்போல் தலைவர் ரொனால்ட் நோபிள் சகிதம் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதையோ எந்த அமைப்பைச் சேர்ந்தவர் என்பதையோ அமைச்சர் மலிக் தெரிவிக்கவில்லை.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் போது பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கு தீவிரமான முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் இச்சதியை கண்டுபிடிப்பதற்கு இன்டர்போல் உதவியதாகவும் பாக். உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மலிக் கூறினார். இந்திய அரசாங்கத்திற்கு இதுகுறித்து அறிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் தலிபான்கள் செயற்பட ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

'பயங்கரவாதிகளுக்கு எல்லைகளோ மதங்களோ கிடையாது என்பதை மறந்துவிட வேண்டாம். தலிபான்கள் இந்தியாவில் தமதுசெயற்பாடுகளை ஆரம்பித்துள்ளமைக்கான பல அறிகுறிகள் உள்ளன' என அவர் கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .