Super User / 2011 மார்ச் 25 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு நியூஸிலாந்து அணி தெரிவாகியுள்ளது. இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணியை 49 ஓட்டங்களால் தோற்கடித்ததன் மூலம் நியூஸிலாந்து அரையிறுதிக்கு தெரிவாகியது.
இன்று பங்களாதேஷின் மீர்பூர் நகரில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 221 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 43.2 ஓவர்களில் 172 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
ஜெஸி ரைடர் 83 ஓட்டங்களைப் பெற்றார். தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களில் மோர்ன் மோர்கெல் 46 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 43.2 ஓவர்களில் 172 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
அவ்வணியின் சார்பில் ஆகக் கூடுதலாக ஜக் கலிஸ் 47 ஓட்டங்களைப் பெற்றார். அவ்வணியின் நான்கு வீரர்கள் மாத்திரமே 10 இற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.
நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களில் ஜேக்கப் ஒராம் 39 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நேதன் மெக்கலம் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கிடையிலான காலிறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் நியூஸிலாந்து அணி அரையிறுதியில் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

4 hours ago
6 hours ago
16 Nov 2025
லீம் Saturday, 26 March 2011 03:38 AM
தென்னாபிரிக்காவின் துரதிஷ்டம் தொடர்கின்றது...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
16 Nov 2025