2021 ஜூலை 31, சனிக்கிழமை

ரிக்கி பொன்டிங் ராஜினாமா

Super User   / 2011 மார்ச் 29 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான அணித்தலைவர் பதவியிலிருந்து ரிக்கி பொன்டிங் இராஜினாமா செய்துள்ளார்.

ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் தோல்வியுற்று, உலகக் கிண்ண போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணி காலிறுதிப் போட்டியுடன் வெளியேறியதையடுத்து பொன்டிங் விலக  செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை அவர் ராஜினாமா செய்துள்ளார்.

36 வயதான ரிக்கி பொன்டிங் 2002 ஆம் ஆண்டிலிருந்து ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் 2004 ஆம் ஆண்டிலிருந்து டெஸ்ட் போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணித்தலைவராக பணியாற்றி வந்தார்.

இதுவரை 152 டெஸ்ட் போட்டிகளிலும் 359 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் அவர் விளையாடியுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் 134 வருடடெஸ்ட் வரலாற்றில் மிக வெற்றிகரமான அணித்தலைவராக ரிக்கி பொன்டிங் விளங்கியமை குறிப்பிடத்தக்கது.

அவர் தலைமையில் 77 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவுஸ்திரேலிய அணி 48 போட்டிகளில் வெற்றி பெற்றது. அதேவேளை, பொன்டிங் தலைமையில் 227 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 163 போட்டிகளில் அவுஸ்திரேலியஅணி வெற்றியீட்டியுள்ளது.

ரிக்கி பொன்டிங்கிற்கு பதிலாக மைக்கல் கிளார்க் புதிய அணித்தலைவராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பங்களாதேஷுடனான போட்டிகளுக்கான அணியை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை நாளை வெளியிடவுள்ள நிலையில் தனது நிலைப்பாடு குறித்து அறிவிக்குமாறு கிரிக்கெட் சபை பொன்டிங்கை பணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் சுற்றுலாவின் பின்னர் தென்னாபிரிக்கா, இலங்கை ஆகிய நாடுகளிலும் அவ்வணி போட்டிகளில் பங்குபற்றவுள்ளது.


  Comments - 0

 • ilmrizvi Wednesday, 30 March 2011 07:07 AM

  ஆஸ்திரேலியா அணிக்கு அடிச்சானே ஆப்பு, ஆப்பு அடிச்ச இந்தியாவுக்கு நாளை வேக்கபோறான் ஆப்பு பாகிஸ்தானுக்கு அடிக்க போரன் ஸ்ரீலங்கா

  Reply : 0       0

  sKumar Tuesday, 05 April 2011 07:27 PM

  Finally aappu yarukku parthayaa?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .