2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

Super User   / 2011 மார்ச் 29 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு இலங்கை அணி தெரிவாகியுள்ளது. இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணியை 5 விக்கெட்டுகளால் தோற்கடித்ததன் மூலம் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 48.5 ஓவர்களில் 217 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பதிலுக்குத்

துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 47.5ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

நியூஸிலாந்து அணியின் சார்பில் ஆகக்கூடுதலாக ஸ்கொட் ஸ்டைரிஸ் 57 ஓட்டங்களைப் பெற்றார்.

இலங்கை பந்துவீச்சாளர்களில் அஜந்த மெண்டிஸ் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் லசித் மாலிங்க 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் முத்தையா முரளிதரன் 42 ஓட்டங்களுக்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இலங்கை அணி துடுப்பெடுத்தாட ஆரம்பித்தபின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இரண்டாவது விக்கெட்டுக்காக திலகரட்ன தில்ஷானும் குமார் சங்கக்காரவும் 120 ஓட்டங்களைப் பெற்றனர்.

ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 160 ஓட்டங்களைப் பெற்றிருந்த இலங்கை அணி திடீரென 169 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் 4 ஆவது விக்கெட்டை இழந்தது.

தில்ஷான்   73 ஓட்டங்களுடனும் சங்ககார 54 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். அடுத்து துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய மஹேல ஜயவர்தன ஒரு ஓட்டத்தை மாத்திரமே பெற்றார். சாமர சில்வா 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோது இலங்கை அணி 42.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 189 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.

எனினும் திலான் சமரவீரவும் ஏஞ்சலோ மத்தியூஸும் மேலுதிக விக்கெட் இழப்பை தடுத்து அணியின்வெற்றியை உறுதிப்படுத்தினர். திலான் சமரவீர 23 ஓட்டங்களைப் பெற்றார். ஏஞ்சலோ மத்தியூஸ் 14 ஓட்டங்களைப் பெற்றார்.

உலகக் கிண்ண இறுதிப்போட்டி எதிர்வரும் ஏப்ரல் 2 ஆம் திகதி மும்பையில்  நடைபெறவுள்ளது.

நாளை நடைபெறவுள்ள இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான  இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறவுள்ள அணியுடன் இறுதிப்போட்டியில் இலங்கைஅணி மோதவுள்ளது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .