2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

எனது வாழ்க்கையின் மிக முக்கிய போட்டி ; நான் விளையாடுவேன்: முரளி

Super User   / 2011 ஏப்ரல் 01 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாளை நடைபெறவுள்ள உலகக் கிண்ண இறுதிப்போட்டி தனது வாழ்க்கையின் மிக முக்கியமான போட்டி எனத் தெரிவித்துள்ள இலங்கைக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன், இப்போட்டியில் தான் விளையாடவுள்ளதாகவும் இன்று வெள்ளிக்கிழமை கூறியுள்ளார்.

இந்தியாவுடனான உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் காயங்கள் காரணமாக, முரளி  விளையாடுவாரா என்பது சந்தேகத்திடமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் தான் இப்போட்டியில் விளையாடவுள்ளதாக இன்று டுவிட்டர் மூலம் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

முரளிதரன் இப்போட்டியில் விளையாடுவாரா என்பது குறித்து நிலவிய சந்தேகங்கள் இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளன.

வலிகளுக்கு மத்தியிலும் முரளி விளையாடுவார் என இலங்கை அணியின் பயிற்றுநர் ட்ரவோர் பெய்லீஸ் இன்று காலை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0

 • Thilak Saturday, 02 April 2011 05:14 AM

  வாழ்த்துக்கள் முரளி

  Reply : 0       0

  abdul latheef Saturday, 02 April 2011 05:58 AM

  muralitharan teammil erunthu vilaginal team migavum mosamagi vidum.

  Reply : 0       0

  xlntgson Saturday, 02 April 2011 08:55 PM

  மிக கௌரவமான முடிவு, எல்லாரும் வாழ்த்துவர்!
  ஜனாதிபதியின் அறிக்கையும் அதையே காட்டுகிறது!
  ஓய்வு ஓய்வல்ல நல்ல பொறுப்பு காத்திருக்கிறது!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .