2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

கிரிக்கெட் சபை அனுமதித்தால் நிர்வாணமாக தோன்றுவேன்: மொடல் பூனம்

Super User   / 2011 ஏப்ரல் 02 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்திய அணி வென்றால் அவர்களுக்காக நிர்வாணமாக தோன்றுவதாக தெரிவித்த மொடல் அழகி பூனம் பாண்டே, இந்திய கிரிக்கெட் சபை அனுமதி அளித்தால், அத்திட்டத்தை தான் முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார். இது இந்திய அணிக்கு சிகிச்சையளிக்கும் பெறுமதியைக் கொண்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

 

 பகிரங்கமாக நிர்வாணமாகத் தோன்றினால், கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என பலர் அவருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளனராம். இதனால் தற்போது அவரின் செல்லிடத் தொலைபேசி நிறுத்தப்பட்டுள்ளது.

எனினும் இந்திய கிரிக்கெட் சபை அனுமதித்தால் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்காக தான் நிர்வாணமாகத் தோன்றத் தயார் என எனவும் அச்சுறுத்தல்கள் பற்றி தனக்கு கவலையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் சபைக்கு எழுதிய கடிதத்தில் "தீவிர கிரிக்கெட் ரசிகை என்ற வகையிலும் எல்லாவற்றையும்விட இந்திய தேசாபிமானி னஎ;ற வகையிலும் நான் உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன். இந்திய அணி வெற்றி பெற வேண்டும் இந்தியா உலகக்கிண்ண்தை வெல்வதற்காக இந்த ஒரு படி முன்செல்லும் நடவடிக்கையை மேற்கொள்ள நான் தயார்.

இந்திய அணியை உற்சாகப்படுத்தவும் உலகக் கிண்ணத்தை வெல்ல வைக்கவும் மேலதிக ஊக்கத்தை ஏற்படுத்தும் எனது ஆவலை நான் ஏற்கெனவே வெளிப்படுத்தியுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.

20 வயதான பூனம் பாண்டே, தனது கடிதத்தில் மேலும் தெரிவிக்கையில், "இந்திய வீரர்களை விளையாட்டு உணர்வை ஊக்குவிப்பதற்காக அவர்கள் தெரிவு செய்யும் எந்த இடத்திலும் நேரத்திலும் நிர்வாணமாக தோன்ற நான் தயார். இது மனிதர்களை ஊக்குவிக்கிறது என இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

பொது இடத்தில் பகிரங்கமாக நிர்வாணமாகத் தோன்றுவது குற்றச்செயல் என்பதை நான் அறிவேன். ஆனால் வயது வந்தவர்களின் சம்மதத்துடன் தனிப்பட்ட ரீதியில் இப்படிதோன்றுவது குற்றமாகாது"என அவர்கூறியுள்ளார்.


  Comments - 0

 • abdulmohamed Sunday, 03 April 2011 02:05 AM

  சரியான போட்டி ஹி ஹி ஹி .........

  Reply : 0       0

  Mohammed Rafi Sunday, 03 April 2011 07:48 PM

  தெளிவான பைத்தியங்களையெல்லாம் பகிரங்கமாக பேசவிட்டு வேடிக்கையும் பார்க்கிரார்கள் இதற்கு யார்தான் முடிவு கட்டுவது?

  Reply : 0       0

  Cassim Sunday, 03 April 2011 08:17 PM

  என்ன கொடும சார்.இப்படியும் நடக்குதா?

  Reply : 0       0

  xlntgson Sunday, 03 April 2011 08:54 PM

  இன்னும் ஓடவில்லையா, வெற்றி என்றதும் ஓடுகளத்தில் இறங்கி ஓடி இருப்பாரென்று! அனுமதி எல்லாம் வெறும் வேஷம்! யார் இதெற்கெல்லாம் அனுமதி கொடுப்பர், மேலைத்தேய நாடுகளில் ஓடிய பெண்கள் எல்லாம் சபை அனுமதி கேட்டுக்கொண்டா ஓடினர்?
  பத்திரிகைகளுக்கும் வேறு வேலை இல்லை இவருக்கும் வேறு வேலை இல்லை போலும்!
  ஓடவேண்டும் என்று தோன்றினால் ஒருவருக்கும் சொல்லாமல் துகிலுரிந்து ஓடி இருப்பார், நல்ல ODI

  Reply : 0       0

  Muneer Sunday, 03 April 2011 11:13 PM

  பூனம் பாண்டே , நீங்கள் செய்வது உங்களுக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும். ஒரு கணம், கிரிக்கட் வீரர்களின் மனைவி மக்களிடம் கேட்டு பாருங்கள். இப்படி செய்யவா என்று? உங்களை பழைய செருப்பினால் அடிப்பார்கள். ஹீ ஹீ ஹீ

  Reply : 0       0

  riyas Mohamed Riyas Monday, 04 April 2011 01:49 AM

  இதெல்லாம் ஒரு செய்தி என்று சொல்லி எங்களை மூட் அவுட் பண்ணாம உருப்படியான விஷயங்களை சொன்னால் ரொம்ப நன்றாக இருக்குமே .

  Reply : 0       0

  mcafareed Monday, 04 April 2011 05:07 AM

  உடனடியாக பூனம் நிர்வானமாக்கி செருப்பால் அடிக்க வேண்டும்

  Reply : 0       0

  sihan Monday, 04 April 2011 05:14 AM

  அடுத்த சுனாமி உங்களை வீடு தேடி வரும் ......

  Reply : 0       0

  sihan Wednesday, 06 April 2011 12:41 PM

  ematrum penkal irukum varai , emarum ankal iruparhal.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .