2021 ஜூன் 24, வியாழக்கிழமை

எனது உலகக் கிண்ண வாழ்க்கை முடிந்துவிட்டது: மாலிங்க

Super User   / 2011 ஏப்ரல் 03 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தனது உலகக்கிண்ண கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது எனவும் அடுத்த உலகக் கிண்ண சுற்றுப் போட்டியில் தான் விளையாடப் போவதில்லை எனவும் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் லஷித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற இந்தியாவுடனான இறுதிப்போட்டியின் பின்னர் இன்று இலங்கை வீரர்கள் தாயகம் திரும்பினர். அதன்பின் தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த பேட்டியில் மாலிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

'எனது அணிக்கு என்னால் முடிந்தளவு காலம் சேவையாற்ற முடியுமென நம்புகிறேன். ஆனால் 2015 ஆம் ஆண்டு அடுத்த உலகக் கிண்ணப் போட்டியில் என்னால் விளையாட முடியும் என நான் எண்ணவில்லை. கடந்த சில வாரங்களுக்காக காயத்திற்குள்ளாகியிருந்தேன். சிறிதளவே ஓய்வு கிடைத்தது' என அவர் கூறினார்.

தனக்கு ஏற்பட்ட காயம் குறித்த விபரங்களை அவர் தெரிவிக்கவில்லை. 2008 ஆண்டிலும்  2009 ஆம் ஆண்டின் முற்பகுதியில் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் போட்டிகளில் பங்குபற்ற முடியாமலிருந்தமை குறிப்பிடத்தக்கது.

'அடுத்த உலகக்கிண்ணப் போட்டியில் சிறப்பாக விளையாடுமாறு இளம் வீரர்களை நான்  கோருகிறேன்' என அவர் கூறினார்.

நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் வீரேந்தர் ஷேவாக், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் விக்கெட்டுகளை மாலிங்க மிக விரைவாக வீழ்த்தினார். எனினும் இலங்கை அணியை 6 விக்கெட்டுகளால் இந்தியா வென்றமை குறிப்பிடத்தக்கது.

இச்சுற்றுப்போட்டியில் அவர் மொத்தமாக 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

எனது அணி எதிர்பார்த்ததை நான் நிறைவேற்றியுள்ளேன். நேற்றைய போட்டியில் பந்து ஈரமாக இருந்ததால் முறையாக யோர்க்கர் வீச முடியவில்லை. என்னால் அதிக விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமை குறித்து கவலையடைகிறேன்' எனவும் மாலிங்க கூறினார்.
 


  Comments - 0

 • athirkalam Wednesday, 12 October 2011 12:05 AM

  மலிங்க நீங்கள் இலங்கை அணிக்கு கிடைத்த வரப்ரசாதம். நீங்கள் இலங்கை அணிக்காக இன்னும் சில காலம் விளையாட வேண்டும் தயவு செய்து உங்கள் முடிவை மாற்றி கொள்ளுங்கள்

  Reply : 0       0

  Aasath Sunday, 14 August 2011 05:56 AM

  Plese no rest malinga.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .