2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

கிங்ஸ் லெவின் பஞ்சாப்பை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ்

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 29 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கிங்ஸ் லெவின் பஞ்சாப் அணியும் மோதவுள்ளன. இத்தொடரின் 41ஆவது போட்டி இன்றாகும்.

மும்பை வன்கெடே மைதானத்தில் இடம்பெறவுள்ள இப்போட்டி இன்றிரவு 8 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

றோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், அடம் கில்கிறிஸ்ற் தலைமையிலான கிங்ஸ் லெவின் பஞ்சாப் அணியும் இப்போட்டியில் மோதுகின்றன. கிங்ஸ் லெவின் பஞ்சாப் அணியின் தலைவர் அடம் கில்கிறிஸ்ற் துடுப்பாட்டத்தில் இன்னமும் பிரகாசிக்காத ஆரம்பிக்காத நிலையில் அவர் அழுத்தங்களை எதிர்கொள்கின்றார்.

8 போட்டிகளில் பங்குபற்றியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 5 போட்டிகளில் வெற்றியும், 4 போட்டிகளில் தோல்வியுமாக 10 புள்ளிகளைப் பெற்று 4ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

மறுபுறத்தில் கிங்ஸ் லெவின் பஞ்சாப் அணி 8 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றியும், 4 போட்டிகளில் தோல்வியுமாக 8 புள்ளிகளைப் பெற்று 6ஆவது இடத்தில் காணப்படுகிறது.

இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெறுமாயின் 12 புள்ளிகளைப் பெறும் என்பதோடு, இன்றைய முதலாவது போட்டியின் முடிவைப் பொறுத்து இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக் காணப்படுகிறது.

கிங்ஸ் லெவின் பஞ்சாப் அணி இப்போட்டியில் வெற்றிபெற்றுக் கொள்ளுமாயின், இன்றைய முதலாவது போட்டியின் முடிவைப் பொறுத்து புள்ளிகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புக் காணப்படும்.

எதிர்பார்க்கப்படும் அணிகள்:
மும்பை இந்தியன்ஸ்: டுவைன் ஸ்மித், சச்சின் டென்டுல்கர், டினேஷ் கார்த்திக், ரோகித் சர்மா, அம்பத்தி ராயுடு, கெரான் பொலார்ட், ஹர்பஜன் சிங், மிற்சல் ஜோன்சன், லசித் மலிங்க, றிஷி தவான், பிரக்ஜான் ஓஜா

கிங்ஸ் லெவின் பஞ்சாப்: மந்தீப் சிங், அடம் கில்கிறிஸ்ற், மனொன் வோக்றா, லூக் பொமர்ஸ்பக், டேவிட் மில்லர், டேவிட் ஹசி, பியூஸ் சாவ்லா, ஹர்மீற் சிங், பிரவீன் குமார், பர்வீந்தர் அவானா

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .