Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஓகஸ்ட் 07 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
நமது நாட்டில் நடக்கும் சம்பவங்களை பார்க்கும் போது, இந்த அலைபேசியால் என்னென்ன விபரீதங்கள் இடம்பெற போகிறதோ! என அச்சமாக இருக்கிறது. எனினும், அலைபேசிகளை இளைஞர்களும், யுவதிகளும் மிக முக்கியமான விடயங்களுக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்பதை இவ்வாறான செய்திகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன.
உண்மையில், அலைபேசிகளையும் ஏனைய தொழிற்நுட்ப சாதனங்களையும் பயன்படுத்தி இளைஞர்கள், யுவதிகள் பலர் முன்னேற்றமடைந்துள்ளனர்.
எனினும், மொனராகலையில் இடம்பெற்ற சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நக்கல்ல 16வது மைல்கள் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவியான 13 வயது சிறுமியின், தாய் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, தன்னுடைய குடும்பத்தை விட்டுவிட்டு சென்றுவிட்டார். அந்த மாணவியான சிறுமி, தனது பாட்டி மற்றும் தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
அந்த மாணவி அப்பகுதியில் இளைஞன் ஒருவனுடன் காதல் உறவில் இருந்துள்ளார். அந்த இளைஞன் மாணவிக்கு கைத்தொலைப்பேசி ஒன்றையும் பரிசளித்துள்ளார்.
இந்த விவகாரம் தந்தைக்கு தெரியவந்ததையடுத்து அவர் தனது மகளை எச்சரித்து, கைத்தொலைபேசியை பிடுங்கி உடைத்துள்ளார்.
இதனால் மனமுடைந்த மாணவி பாட்டியுடன் வீட்டில் தனியாக இருக்கும் போது படிப்பதாக கூறி அறையின் கதவை மூடிக்கொண்டுள்ளார். நீண்டநேரமாகியும் பேத்தி வெளியே வராமையால், அச்சமடைந்த பாட்டி, கதவை தட்டியுள்ளார்.
கதவைத் திறக்காததால் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, அறையில் தன் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் மாணவி கிடந்துள்ளார்.
அயலவர்களின் உதவியுடன் உடனடியாக அவரை மீட்டு மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர் எழுதிய கடிதமொன்று அறையில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக. தெரிவித்த மொனராகலை பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சுமனசிறி குணதிலக
16 minute ago
18 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
18 minute ago
1 hours ago
2 hours ago