2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

மகளிர் உலகக் கிண்ண றக்பி: 4 ஆவது தடவையாக நியூஸிலாந்து சம்பியன்

Super User   / 2010 செப்டெம்பர் 06 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பெண்களுக்கான உலகக் கிண்ண றக்பி சுற்றுப்போட்டியில் நியூஸிலாந்து அணி தொடர்ந்து நான்காவது தடவையாக சம்பியனாகியுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்ற இத்தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணியை 13-10 புள்ளிகள் விகிதத்தில் நியூஸிலாந்து தோற்கடித்தது.

சர்வதேச றக்பி சபையினால் (ஐ.ஆர்.பி) 1991 ஆம் ஆண்டு முதல் 4 வருடங்களுக்கு ஒரு தடவை மகளிர் உலகக்கிண்ண றக்பி சுற்றுப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. முதலாவது உலகக்கிண்ணத்தை அமெரிக்க அணி வென்றது. இங்கிலாந்து இரண்டாமிடம் பெற்றது.

1994 இல் இரண்டாவது உலகக்கிண்ணத்தை இங்கிலாந்து அணி வெல்ல, அமெரிக்கா இரண்டாமிடத்தைப் பெற்றது.

1998 இல் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அமெரிக்க அணியை தோற்கடித்து நியூஸிலாந்து அணி சம்பியனாகியது.
அதன்பின் 2002, 2006, 2010 ஆகிய மூன்று வருடங்களிலும் நடந்த இறுதிப்போட்டிகளில் இங்கிலாந்து அணியை தோற்கடித்து நியூஸிலாந்து அணி சம்பியனாகியமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை 12 அணிகள் இச்சுற்றுப்போட்டியில் பங்குபற்றின. அவுஸ்திரேலிய அணி மூன்றாமிடத்தையும் பிரெஞ்சு அணி நான்காமிடத்தையும் பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .