2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

மாலிங்க 5 விக்கெட்; மும்பை அணி இலகு வெற்றி

Super User   / 2011 ஏப்ரல் 10 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியொன்றில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான மும்பை இண்டியன்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. மும்பை அணி சார்பாக விளையாடிய இலங்கை வீரர் லஷித் மாலிங்க இப்போட்டியில் 13 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் நடைபெற்ற இப்போட்டியில் மாலிங்கவின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்கத் திணறிய டெல்லி அணி 17.4 ஓவர்களில் 95 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. ஓஜா 29 ஒட்டங்களையும் வேணுகோபால் ராவ் 26 ஓட்டங்களையும் அணித்தலைவர் வீரேந்தர் ஷேவாக் 19 ஓட்டங்களையும்  பெற்றனர்.

மும்பை அணி சார்பில்  லஷித் மாலிங்க 13 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் ஹர்பஜன் சிங் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் அலி மூர்ட்டஸா 21 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 16.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 99 ஓட்டங்களைப் பெற்றது. சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களையும் ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களையும் பெற்றனர்.

லஷித் மாலிங்க இப்போட்டியின் சிறப்பாட்டக் காரராகத் தெரிவானார்.

(Pix by: AFP) 


  Comments - 0

  • jaliyath Monday, 11 April 2011 06:39 PM

    மலிங்க தனது ச்லிங்க மூலம் துடுப்பாட்டக்காரர்களை திணறடிக்கிறார்.
    நம்ம வீரர் சாதனை படை த்தால் நமக்குத்தான் பெருமை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .