2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு

Editorial   / 2019 ஜூலை 12 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்பமை உரிமை மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுக்கள் மீதான விசாரணை 7 நீதியரசர்கள் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் எதிர்வரும் 25ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை காரணமாக அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக தெரிவித்து இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த மனுக்களை விசாரணை செய்வதற்காக ஏழு நீதியரசர்களை கொண்ட குழாம், கடந்த 8ஆம் திகதி பிரதமர நீதியரசர் ஜயந்த ஜயசூரியவால் நியமிக்கப்பட்டது.

அதன் தலைவராக  பிரதமர நீதியரசர் செயற்படுவதுடன், நீதியரசர்களான சிசிர த அப்று, புவனேக அலுவிஹார, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, எல்.டி.பி. தெஹிதெனிய மற்றும் முர்து பெர்ணான்டோ ஆகியோர் நீதியரசர்கள் குழாமில் அங்கம் வகிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X