Editorial / 2021 ஜூன் 28 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனக்கு அமைச்சர் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாக வெளியாகியிருக்கும் செய்தியை முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன, மறுத்துள்ளார்.
ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், அவ்வாறான எந்தவிதமான கோரிக்கையை அரசாங்கத்திடம் தான் முன்வைக்கவில்லை, அது தவறானது. அமைச்சர் பதவி மட்டுமன்றி, அரசாங்கத்திடம் எந்தவொரு பதவியையும் தான் கோரவில்லை என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாத நடுப்பகுதியில் அமைச்சரவையில் மாற்றமொன்று செய்யப்படவிருப்பதாக தகவல்கள் கசிந்திருந்தன. இந்நிலையிலேயே, முன்னாள் ஜனாதிபதிக்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படலாமென அந்தத் தகவல்கள் தெரிவித்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .