2025 ஜூலை 05, சனிக்கிழமை

இரண்டு வாரத்தில் புதிய அரசியல் கட்சி; சிறீகாந்தா அறிவிப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் இரண்டு வாரத்தில் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்க உள்ளதாக ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகமாக இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள சட்டத்தரணி சிறீகாந்தா தெரிவித்துள்ளார்

யாழிலுள்ள தனது அலுவலகத்தில் இன்று (02) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே புதிய கட்சியை ஆரம்பிப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

மேலும், தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பு தமிழரசுக் கட்சியின் எடுபிடியாக ஒட்டிக்கொண்டு செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே, மீண்டும் ரெலோவுடன் இணைந்து கொள்வதென்பது சாத்தியமில்லை என்பதால், தனியாக பயணிக்க உள்ளதுடன், தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளை இணைந்ததாக அந்தப் பயணம் அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .