Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 09 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊழல் ஒழிப்பு விடயத்தில் நாட்டு மக்களில் நூற்றுக்கு 47 சதவீதமானவர்களே அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளதாக ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) தெரிவித்துள்ளது.
சர்வதேச ஊழல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அந்த அமைப்பினால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
நீதிமன்றத்தின் மீது நூற்றுக்கு 73 சதவீதமானவர்களும் பொலிஸார் மீது நூற்றுக்கு 57 சதவீதமானவர்களும் நம்பிக்கை வைத்துள்ளனர்.
ஆய்வில் பங்கேற்றவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான கருத்துக்களை கொண்டுள்ளதுடன், தேவைகளை விரைவாக நிறைவேற்றுவதற்காக இலஞ்சம் கொடுப்பதில் தவறில்லை என்ற எண்ணத்தில் மூன்றில் ஒரு பகுதியினர் உள்ளதாக தெரியவந்துள்ளது.
பதிலளித்தோரில் அதிகமானவர்கள் ஊழலின் ஒரு வடிவமாக பாலியல் இலஞ்சம் இருப்பதாக நம்பிக்கை கொண்டுள்ளதுடன், அரச அதிகாரிகளினால் அரச சேவைகளை வழங்கும் போது பிரதிபலனாக பாலியல் சலுகைகள் சிலவேளைகளில் அல்லது அடிக்கடி பெறப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவை கிராமப்புற மக்களிலும் பார்க்க நகரப்புற மக்களிடம் அதிகம் கோரப்பட்டுள்ளது. எனினும், கிரமமப்புற மக்களிலும் பார்க்க தோட்டப்புற மக்கள் மிகவும் இலகுவில் பாதிப்படையக் கூடியவர்களாக உள்ளனர் என்பதை தரவுகள் காட்டுகின்றன.
இலஞ்சம் ஊழல் தொடர்பான குற்றங்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழு ஒன்று இயங்குகின்றது எனும் விடயத்தை நூற்றுக்கு 86 சதவீதமானவர்கள் அறிந்திருந்தாலும், அதில் நூற்றுக்கு 72 சதவீதமானவர்களுக்கு எவ்வாறு முறையிடுவது என்பது தொடர்பில் போதிய தெளிவின்மை காணப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
17 minute ago
22 minute ago
32 minute ago