Editorial / 2025 நவம்பர் 25 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகளில் சில கேள்விகள் கசிந்துள்ளதா என்பதை அறிய விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
நுகேகொடையில் உள்ள தனியார் கல்விக்கூடத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பொருளியல் மாதிரி வினாத்தாளில் முதலாம் வினாத்தாளில் 27 கேள்விகள், உயர்தரப் பொருளியல் வினாத்தாளில் 27 கேள்விகளும் ஒரே மாதிரியாக இருப்பதாக பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25) தெரிவித்தார்.
"இது குறித்து விசாரணை நடத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் கூறினார்.
கொழும்பில் உள்ள மாணவர்கள் போல கிராமங்களில் உள்ள மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறும் வாய்ப்பைப் பெறாததால், இதுபோன்ற வினாத்தாளின் மூலம் பாகுபாடு காட்டப்படுவதாக அவர் கூறினார். கிராமங்களில் உள்ள மாணவர்கள் நுகேகொடைக்கு வரமுடியாது. அது சாத்தியப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.
11 minute ago
37 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
37 minute ago
50 minute ago