Editorial / 2020 மார்ச் 21 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி காலை 6 மணி வரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
24ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படும்.
அத்துடன், ஏனைய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 23 திகதி காலை 6 மணிக்கு நீக்கப்படும்.
மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுக்கப்படவுள்ளது.
அப்பகுதிகளில் இந்த ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் சந்தர்ப்பங்களில் நாட்டில் உள்ள மதுபான சாலைகளை திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
12 minute ago
19 minute ago
30 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
19 minute ago
30 minute ago
40 minute ago