2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

எதிர்க்கட்சித் தலைவரின்றி அரசியலமைப்புப் பேரவை இன்று கூடுகிறது

Editorial   / 2019 டிசெம்பர் 12 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அரசியலமைப்பு பேரவை இன்று (12) சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.   

இந்த நிலையில், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினராக எதிர்க்கட்சித் தலைவர் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது.

எதிர்க்கட்சித் தலைவராக பரிந்துரைக்கப்பட்டுள்ள சஜித் பிரேமதாச,  நாடாளுமன்றின் அங்கீகாரம் இல்லாது 12ஆம் திகதி கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அமைய ஸ்தாபிக்கப்பட்ட அரசியலமைப்புப் பேரவையில் சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் பேரவைக்கு உத்தியோகபூர்வமாக அதிகாரமளிக்கப்பட்டவர்களாவர்.

பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்துள்ளதால் அவரால் இன்று அரசியலமைப்புப் பேரவையின் கூட்டத்தில் கலந்துகொள்ளமுடியும்.

இதேவேளை, அரசியலமைப்புப் பேரவைவை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு இன்றைய கூட்டத்துக்கு வருமாறு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .