Freelancer / 2024 செப்டெம்பர் 01 , மு.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
344 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
379 ரூபாயாக காணப்பட்ட ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 02 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
317 ரூபாயாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீற்றரின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
355 ரூபாயக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் விலை 03 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் விலையில் மாற்றம் இல்லை.
இதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைத் திருத்தத்திற்கு சமாந்திரமாக தமது எரிபொருட்களின் விலைகளை திருத்தம் செய்துள்ளதாக ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளது.
அதேநேரம் சினோபெக் நிறுவனமும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைத் திருத்தத்திற்கு சமாந்திரமாக எரிபொருட்களின் விலைகளை திருத்தியுள்ளது.R.
23 minute ago
26 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
26 minute ago
59 minute ago
1 hours ago