2025 டிசெம்பர் 31, புதன்கிழமை

குரங்குகளைச் சுட துப்பாக்கி வழங்கிய எம்.பி

Editorial   / 2025 டிசெம்பர் 31 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்

சாவகச்சேரியில் தொல்லை கொடுக்கும் குரங்கை சுட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  துப்பாக்கிகள் வழங்கினார்.                      

குரங்குகளின் தொல்லையால் சாவகச்சேரி கமக்காரர்கள்  பயிர்களின் அழிவை தாங்க முடியாது அளித்த புகாரை அடுத்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு அமைய  துப்பாக்கிகள் வழங்கப்பட்டள்ளன.

சாவகச்சேரியில் தென்மராட்சி பிரதேசத்தில்  குரங்குகளை  சுட்டு கலைப்பதற்காக இறப்பர்  துப்பாக்கிகளை 2025ம் ஆண்டுக்கான   தனது பன்முகப்படுத்தப்பட்ட  நிதியிலிருந்து  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பத்து லட்சம் ரூபாய் பெறுமதியான 20 கமக்காரர்களுக்கு  துப்பாக்கிகளை வழங்கினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X