2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

கறுப்பு பட்டி அணிந்து எதிர்க்கட்சியினர் வந்தனர்

Editorial   / 2020 செப்டெம்பர் 08 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்வதற்கு இடமளித்தமைக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்துள்ளனர்.

முன்னதாக இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதனையடுத்து, பிரேமலால் ஜயசேகரவின் பதவிப்பிரமாணம் சட்டத்திற்கு முரணானது என தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய அமர்விலிருந்து வௌிநடப்பு செய்துள்ளனர்.

பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X