2025 நவம்பர் 01, சனிக்கிழமை

`கிழக்கு முனையத்தை விற்கவோ, குத்தகைக்கு வழங்கவோ தீர்மானமில்லை’

Editorial   / 2021 ஜனவரி 31 , பி.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு துறைமுக ஊழிய தொழிற்சங்கங்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடுமளவுக்கு அங்கு எதுவுமே இடம்பெறவில்லையெனத் தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, கொழும்புத் துறைமுகத்தின், கிழக்கு முனையத்தை விற்பதற்கோ, குத்தகைக்கு வழங்குவதற்கோ அரசாங்கம் எவ்வித தீர்மானங்களையும் எடுக்கவில்லை என்றார்.

தங்காலையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உண்மையில் எதிர்க்கட்சியினர், எம்மீது குற்றம் சுமத்துவதற்கு எதுவுமில்லை. கிழக்கு மு​னையத்தை நாம் யாருக்கும் வழங்க மாட்டோம். விற்கவோ, குத்தகைக்கோ வழங்க மாட்டோம். அது எமது கட்டுப்பாட்டிலேயே உள்ளது எனத் தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ,  தொழிற்சங்கங்களுக்கும் இந்த விடயம் தெரியுமென நான் நினைக்கின்றேன் என்றார்.

“விற்பது தொடர்பில் நாம் கலந்துரையாடலைக் கூட நடத்தவில்லை என்பதை நாம் தெளிவாகச் சொல்கின்றோம். எனவே, இதனால் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது” என்றார்.

பணிப் பகிஸ்கரிப்பு செய்வதற்கு ஒன்றுமில்லை. என்னிடம் வந்து கூறினால், நான் உண்மையைத் தெளிவுபடுத்தி இருப்பேன் எனத் தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ,  அமைச்சரவையில் 99 சதவீதமானோர் விற்கக் கூடாது என்ற தீர்மானத்தில் உள்ளனர். சொத்துகள், வளங்களை விற்பது எமது கொள்கை அல்லவே. அது ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையாகும். அக்கட்சியின். கொள்கையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கல்ல, மக்கள் எமக்கு அதிகாரத்தை வழங்கினர் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X