Editorial / 2019 செப்டெம்பர் 05 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சர் சஜீத் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்து முன்னெடுக்கப்படும் பேரணி தொடரின் மற்றுமொரு பேரணி, குருநாகலில் இன்று (05) இடம்பெறவுள்ளது.
பிற்பகல் 2.30 மணிக்கு இந்த பேரணி ஆரம்பமாகும் என, இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
குருநாகலில் இடம்பெற்ற பேரணிகளில் அதிகளவு மக்கள் கலந்கொண்ட பேரணியாக இது இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த பேரணியில் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளதாகவும் அசர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில, ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களின் கூட்டம், இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்று (05) நிறைவடைந்த பின்னர் இந்தக் கூட்டம் இடம்பெறலாம் என, கட்சி தகவலகள் தெரிவிக்கின்றன.
1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago