J.A. George / 2020 நவம்பர் 02 , பி.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 21 மாத்திரமே என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 27 வயதுடைய நபரின் மரணத்தை கொரோனா உயிரிழப்பாக கருதாமல் இருக்க தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தீர்மானித்துள்ளது.
உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞனின் பிரேத பரிசோதனையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
எனினும், குறித்த மரணம் கொரோனா வைரஸினால் ஏற்படாத காரணத்தால் அதனை கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையுடன் சேர்க்காமல் இருக்க தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தீர்மானித்துள்ளது.
முன்னதாக, இளைஞனின் மரணத்துடன் சேர்த்து கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 என்று தொற்று நோய் விஞ்ஞான பிரிவு அறிவித்திருந்தது.
2 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago