Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 04 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார டீ சில்வா
பேருவளை-பன்னில பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பிரதேசத்தில் மறைந்திருந்த 28 வயதுடைய கர்ப்பிணி, களுத்துறை- நாகொட வைத்தியசாலையில், இன்று (04) சிசுவை பிரசவித்துள்ளாரென, பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி வருண செனவிரத்ன தெரிவித்தார்.
குறித்த பெண் தனது விலாசத்தை மாற்றிக்கூறியே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பின்னர் தாதியர்கள் கர்ப்பிணிப் பெண்ணின் கிளினிக் அட்டையை பார்த்தபோது, இப்பெண் பேருவளை-பன்னில பகுதியைச் சேர்ந்தவரெனத் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, பெண்ணின் இரத்த மாதிரியை சோதனை செய்தபோது, அப்பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், குறித்த பெண் பிரசவித்த சிசுவின் நிலை குறித்து வைத்தியர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருவதுடன், தாயையும் சிசுவையும் தனிமைப்படுத்தியுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, பேருவளையில் இதுவரை இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
2 hours ago