2025 மே 14, புதன்கிழமை

’சபாநாயகர் பதவிக்கு விடை கொடுப்பேன்’

Editorial   / 2020 பெப்ரவரி 08 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலுக்குள் நுழைந்ததிலிருந்து இதுவரையான காலப்பகுதியில், தனது கரங்களை தூய்மையாக வைத்துகொள்ள முடிந்தென பெருமிதம் கொள்ளும் சபாநாயகர் கரு ஜயசூரிய, சபாநாயகர் பதவிக்கு விடைகொடுக்க தயாரெனவும் தெரிவித்துள்ளார். 

தான் சபாநாயகராக பதவி வகித்த காலத்தில் தனக்கு ஆலோசனைகளை வழங்கிய மகாநாயக்க தேரர்களுக்கு நன்றி தெரிவிக்க அவர் ராமக்ஞ பீடத்துக்கு சென்றிருந்தபோதே அவர் மேற்படி விடயங்களை கூறியுள்ளார். 

அரசியலை சாராமல் தேசத்துக்கான பணியாற்றிய தலைவெர சபாநாயகர் கரு ஜயசூரியவை கருதுவதாக தெரிவித்துள்ள மகாநாயக்க தேரர்கள்,  அவருக்கு ஆசியும் வழங்கினர். 

அதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தான் சபாநாயகராக இருந்த காலப்பகுதியில் புதிய வாகனங்களை தனக்காக கொள்வனவு செய்யவில்லை என்றும்,  முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷ பாவனை செய்த வாகனங்களையே உபயோகித்ததாகவும் தெரிவித்தார். 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X