Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஓகஸ்ட் 07 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை, ஒன்றிணைந்த எதிரணிக்கு வழங்குமாறு கோருவதில் பயனில்லையெனக் குறிப்பிட்டுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, எதிர்க்கட்சித் தலைவர் பதவியில், எவ்வித மாற்றமும் இடம்பெறாதென்றும் ஆரூடம் கூறியுள்ளது.
இது தொடர்பில், அநுராதபுரத்தில் நேற்று (06) ஊடகவியலாளர்களுக்குத் கருத்துத் தெரிவித்த, சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நீர்ப்பாசனம், நீர் வழங்கல் முகாமைத்துவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க, ஒன்றிணைந்த எதிரணிக்குள் உள்ள உள்வீட்டுப் பிரச்சினைகளை மூடி மறைத்துக் கொள்வதற்காகவே, அவ்வெதிரணியினர், எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்குக் குறிவைத்துள்ளனரெனத் தெரிவித்தார்.
தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை நீக்கிவிட்டு, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன அல்லது குமார் வெல்கம ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டு உள்ளமையைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இதன் மூலம், அவ்வெதிரணிக்குள் ஏற்பட்டுள்ள உள்வீட்டுப் பிரச்சினை, அம்பலத்துக்கு வந்துள்ளதென்றும் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பான தீர்மானம் குறித்து, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினருக்கு இடையிலான சந்திப்பொன்று, கொழும்பில் நேற்று (06) இரவு இடம்பெற்றது. இதன்போது, எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம், சபாநாயக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (07) இடம்பெறும் நாடாளுமன்ற அமர்வின் போது, ஐ.ம.சு.கூவின் தீர்மானம் தொடர்பில், சபாநாயகரால் அறிவிக்கப்படும்.
எவ்வாறாயினும், ஒன்றிணைந்த எதிரணிக்கு, எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்கவில்லையாயின், நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தத் தீர்மானித்துள்ளதாக, அவ்வெதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை, ஒன்றிணைந்த எதிரணிக்கு வழங்க வேண்டுமென முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில், ஐ.ம.சு.கூவின் நிலைப்பாட்டை, சபாநாயகர் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago