2025 மே 14, புதன்கிழமை

'சம்பள அதிகரிப்பு தீர்மானத்தில் மாற்றம் இல்லை'

Editorial   / 2020 பெப்ரவரி 05 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு மார்ச் மாதம் முதல் அமுலுக்கு வரும் என, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்றில் இன்று (05) அறிவித்துள்ளார்.

சம்பள அதிகரிப்பு விடயம் தொடர்பான இந்த தீர்மானத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாது என்றும், அவர் கூறியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர்  அனுரா குமார திசாநாயக்கவால் தொழிலாளர் சம்பள அதிகரிப்பு குறித்து  எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது,  அதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X