2025 மே 15, வியாழக்கிழமை

சவேந்திரவின் நியமனத்துக்கு அமெரிக்கா கவலை

Editorial   / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் இராணுவ தளபதியாக லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் மிகுந்த கவலையடைவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இராணுவ தளபதியின் நியமனம் தொடர்பில் அமெரிக்க தூதுவர் அலெய்னா பி ரெப்லிட்ஸ் தலைமையிலான கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம், இன்று (19) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையினாலும் ஏனைய அமைப்புகளினாலும் ஆவணப்படுத்தப்பட்ட அவருக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள், பாரதூரமானதும் நம்பகரமானவையும் ஆகும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .