Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
அஸ்லம் எஸ்.மௌலானா / 2019 ஜூன் 27 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியான, தேசிய தௌஹீத் ஜமாஆத் அமைப்பின் தலைவரான சஹ்ரான் ஹாசிமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா ஹாதியா (வயது 28) கல்முனை நீதவான் நீதிமன்றத்தில், நேற்று (26) ஆஜர்படுத்தப்பட்டார்.
சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் இவரும், சஹ்ரானின் புதல்வியும் உயிர்தப்பியிருந்தனர்.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட இருவரும், கொழும்பில், 90 நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். கொழும்பிலிருந்து அழைத்துவரப்பட்ட இவ்விருவரும், கல்முனை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்தே நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
முற்பகல் 11:30க்கும் மதியம் 12:30க்கும் இடையிலும் மாலை 4 மணிமுதல் 4:30 வரைக்கும் இரண்டு கட்டங்களாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட ஷஹ்ரானின் மனைவியையும் அவரது புதல்வியும் குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் எம்.பஸீலினால் கல்முனை நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டன.
இவ்விரு சந்தர்ப்பங்களிலும் அவர், முகம் மூடப்பட்ட நிலையிலேயே அழைத்து வரப்பட்டிருந்தார். அதன்போது, நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு, பன்மடங்காக அதிகரிக்கப்பட்டிருந்தது.
இவ்விசாரணையில் 3 சாட்சியாளர்களும் தனித்தனியாக ஆஜர்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டனர். சாய்ந்தமருது சம்பவம் மற்றும் சஹ்ரானின் மனைவியால் சிலருக்குப் பணம் வழங்கப்பட்டமை தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்றுள்ளன எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கின் அடுத்த விசாரணை, ஜூலை மாதம் 03ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
16 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago
4 hours ago