Princiya Dixci / 2021 ஓகஸ்ட் 11 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுகாதார அமைச்சு, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் இருந்து கைமாற்றப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சுகாதார அமைச்சர் என்ற ரீதியில், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு தீர்வு காண, சுகாதார அமைச்சு உட்பட சுகாதாரத் துறையை வழிநடத்த பவித்ரா வன்னியாராச்சி தவறியுள்ளார் என அதிருப்தி தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், மிக விரைவில் சுகாதார அமைச்சர் பதவிக்குப் பொருத்தமான ஒருவரை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக தற்போதைய அமைச்சரவையில் இருந்து தகுதியான ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், இதன்படி, புதிய சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரண நியமிக்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, வெளிவிவகாரம், கல்வி, சுற்றுலா, மின்சக்தி மற்றும் ஊடகம் உள்ளிட்ட முக்கிய அமைச்சுகளிலும் வெகு விரைவில் பல மாற்றங்கள் ஏற்படுமெனவும் தகவல் கசிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
9 hours ago
14 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
14 Jan 2026