2021 மே 18, செவ்வாய்க்கிழமை

சுவிட்சர்லாந்து தூதரக விவகாரம் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

Editorial   / 2019 நவம்பர் 28 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுவிட்சர்லாந்து தூதரக பணியாளர் ஒருவர் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில்  பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 25 ஆம சுவிட்சர்லாந்து தூதரகத்தில் சேவை செய்யும் பெண் பணியாளர் ஒருவர், வெள்ளை வானில் கடத்தி செல்லப்பட்டு சுமார்  இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியிருந்தது.

இந்த விடயம் தொடர்பிலான விசாரணைகளுக்கு சுவிட்சர்லாந்து தூதரகம் ஒத்துழைப்பு வழங்கும் என எதிர்பார்ப்பதாக விசாரணை அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக, சுவிட்சர்லாந்து தூதுவர் ஹான்ஸ்பீட்டர் மோக்குக்கும், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று, நேற்று (27) மாலை நடைபெற்றது. 

இந்த சந்திப்பின் போது, மேற்படி விவகாரம் தொடர்பில் ஏதாவது ஆராயப்பட்டதா? என்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .