Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 04 , பி.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் இலங்கைப் பிரஜாவுரிமையை சவாலுக்கு உட்படுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனு, மூவரடங்கிய நீதியரசர்கள் குழுவால், சற்று முன்னர் ஏகமனதாக நிராகரிக்கப்பட்டது.
சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களான பேராசிரியர் சந்திரகுப்த தேனுவரவும் காமினி வியங்கொடவினாலும், இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கோட்டாபய, இலங்கையின் குடியுரிமையை முறையாகப் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் அதனால் அவரிடமுள்ள இலங்கைக் கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை, இரட்டைக் குடியுரிமைக்கான சான்றிதழ் ஆகியவற்றைச் செயலிழக்கச் செய்யவேண்டும் என்றும், மனுதாரர்களால் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மனு குறித்த பரிசீலனைகள், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் யசந்த கோதாகொட, நீதியரசர்களாக அர்ஜுன ஒபேசேகர, மஹிந்த ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில், நேற்று முன்தினமும் நேற்றும், இன்றும் இடம்பெற்றுவந்த நிலையில், இன்று (04) மாலை 6 மணிக்கு, மனுவை நிராகரிப்பதாக, நீதியரசர்கள், ஏகமனதாகத் தீர்மானமெடுத்து அறிவித்தனர்.
51 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
2 hours ago