Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 31 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளது. இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 6 இலட்சத்து 59 ஆயிரத்து 14 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
பொலிஸார், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களின் அதிகாரிகள் இன்றும் நாளையும் வாக்களிக்க முடியும்.
பொலிஸார், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் அடுத்த மாதம் 4 மற்றும் 5ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும்.
குறித்த நாட்களில் வாக்களிக்கத் தவறும் வாக்காளர்கள் எதிர்வரும் 7ஆம் திகதி, தாம் கடமையாற்றும் இடத்திற்கு அருகிலுள்ள மாவட்ட செயலகங்களில் தபால் மூலம் வாக்குகளை அளிக்க முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
தபால் மூல வாக்களிப்புக்காக நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago