ஆர்.மகேஸ்வரி / 2018 மே 07 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
மறைந்த லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் “தங்க மயில் விருது” காணாமல் போன விவகாரம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில், அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 29 ஆம் திகதி காலமான பிரபல சிங்கள திரைப்பட இயக்குனரான லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் தங்க மயில் விருதுக்குரிய பதக்கமானது கடந்த 2ஆம் திகதி காணாமல் போயிருந்த நிலையில், 5ஆம் திகதி கொள்ளுபிட்டி- கடுவலை பஸ் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்ஸிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டிருந்ததுடன், இது தொடர்பில் 6 சந்தேகநபர்கள் இன்று (7) காலை கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.
பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் இன்று (7) இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
குறித்த சந்தேகநபர்கள் மக்கள் அதிகம் ஒன்று கூடும் இடங்கள், நிகழ்வுகளை மையப்படுத்தி இவ்வாறான கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட வந்த குழுவென விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த சந்தேகநபர்களுள் ஒருவரைத் தவிர ஏனைய ஐவரும் கம்பளை நாவலப்பிட்டிய, இனிதும பகுதிகளைச் சேர்ந்தவர்களென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இவர்கள் இன்றைய தினம் புதுக்கடை இலக்கம் 3 நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025