Editorial / 2022 ஜனவரி 19 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்க் கட்சிகள் சில இணைந்து, கடிதமொன்றை தயாரித்தது. அந்தக் கடிதம், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் நேற்று (18) கையளிக்கப்பட்டது.
இந்நிலையில், அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், இந்தக் கடிதம் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன.
அந்தக் கேள்விகளுக்கு பதிலளித்துகொண்டிருக்கும் அமைச்சர் உதய கம்மன்பில,
“ எம்முடன் பேசாமல் எங்குச் சென்று பேசினாலும் அதில் பலன் இல்லை. இந்தியாவின் ஒரு மாநிலம் இலங்கை இல்லை. இது தனிநாடாகும். ஆகையால், அந்தக் கடிதத்தைப் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை” என்றார்.
37 minute ago
42 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
42 minute ago
3 hours ago