2025 மே 14, புதன்கிழமை

தேசிய பட்டியல் விவகாரம்; கால எல்லை இன்றுடன் நிறைவு

Editorial   / 2020 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் கட்சிகளில் தேசிய பட்டியல் உறுப்பினர்களை பெயரிடும் கால எல்லை இன்று (14) நிறைவடைகின்றது.

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் 07 அரசியல் கட்சிகளுக்கு தேசிய பட்டியல் ஆசனங்கள் வழங்கப்பட்டன.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, இலங்கை தமிழரசு கட்சி, தேசிய மக்கள் சக்தி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் தமது தேசிய பட்டியல் உறுப்பினர்கள் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கியுள்ளன.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 19 உறுப்பினர்கள் பெயர்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் அபே ஜன பல கட்சி இதுவரை தமது தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழுவுக்கு இதுவரை கையளிக்கவில்லை.

இன்று (14) முற்பகல் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் பெயர் விவரங்களை, தேர்தல் ஆணைக்குழுவில் கையளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று பிற்பகல் 4 மணிக்கு முன்னர் குறித்த இரண்டு கட்சிகளும் தமது தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை அறிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .