2025 மே 14, புதன்கிழமை

தொழில் தேடியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Editorial   / 2020 பெப்ரவரி 23 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்திற்காக மூன்று லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவி ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்களை வழங்குவதாக வாக்குறுதி வழங்கியிருந்தார்.

இதன்படி குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான ஒரு இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டு, வேலைவாய்ப்புக்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

இவர்களுக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 26, 27, 28, 29 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. தெரிவு செய்யப்படுபவர்கள் ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்த அலுவலகங்களில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X