2026 ஜனவரி 13, செவ்வாய்க்கிழமை

நடாஷா எதிரிசூரிய கைது

Editorial   / 2023 மே 28 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பௌத்தமதம், பௌத்த பாடசாலைகள் மற்றும் அதில் பயிலும் மாணவ, மாணவிகளை அவமதிக்கும் வகையில் “மொடாஹிமானய” எனும் தலைப்பில் வீடியோவை பதிவேற்றினார் என்றக் குற்றச்சாட்டின் கீழே நடாஷா எதிரிசூரிய, கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்கபூரை நோக்கி பயணிப்பதற்காக, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தடைந்தபோதே, குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் இவர், கைது செய்யப்பட்டார். அதன்பின்னர், கணினி குற்றவியல் விசாரணைப் பிரிவு அதிகாரிகளிடம் இவர் ஞாயிற்றுக்கிழமை (28) அதிகாலை கையளிக்கப்பட்டார்.

கல்கிஸை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 31 வயதான இந்தப் பெண், மலேசியா கோலாலம்பூரை நோக்கி சனிக்கிழமை (28) அதிகாலை 12.05க்கு புறப்படவிருந்த மலேசியா விமானச் சேவைக்குச் சொந்தமான எம்.எச்.178 என்ற விமானத்திலேயே பயணஞ்செய்யவிருந்தார்.

அந்தப் பெண்ணுடன் பயணம் ஹேன்நாயக முதியன்சலாகே பெத்தும் பண்டார எகொடவத்த என்பவரும் விமான நிலையத்துக்கு வந்திருந்தார்.

எனினும், நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டதன் பின்னர், தன்னுடைய பயணத்தை அவர், கைவிட்டுள்ளார் என்றும், விமான நிலையத்தில் இருந்து அந்நபர் திரும்பிவிட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்விருவரும் மலேசியா கோலாலம்பூருக்குச் சென்று அங்கிருந்து மற்றுமொரு விமானத்தில் சிங்கபூருக்குச் செல்லவிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .