2025 மே 01, வியாழக்கிழமை

”நன்கு ருசிக்கவே கூட்டத்தொடர் ஒத்திவைப்பு”

Editorial   / 2024 ஜனவரி 28 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற கூட்டத்தொடர்  ஒத்தி வைக்கப்பட்டுள்ளது ஏன்? என்பதற்கு விளக்கமளித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்  இது புதுமையான அரசாங்கம் இது.இந்த ஜனாதிபதி பதவிக்கு வந்து பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்தி வைத்தது எத்தனையாவது தடவையோ தெரியாது என்றார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) நடந்த ஊடக சந்திப்பிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி பதவியின் ருசியை நன்கு ருசிக்க வேண்டும் என்றபடியாலும், இறுதி அக்கிராசன உரையினை நிகழ்த்துவதற்குமே கூட்டத்தொடரை ஒத்தி வைத்தார். 2048 ஆண்டு நாட்டை கட்டியெழுப்போம் என்று கதையை கட்டமைத்து தேசத்திற்கு பொய்யாக உரையாற்றவே தயாராகி வருகிறார். இவருடைய இந்த கதைகளை பல தடவை நாம் கேட்டிருக்கிறோம். பதவி பரிபோக முன்னர் மீண்டும் ஒரு முறை அக்கிராசான உரையை நிகழ்த்தவே இந்த பிரயத்தனம் என்றும் மரிக்கார் எம்.பி குற்றஞ்சாட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .