Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2021 ஜனவரி 26 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க, கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து விலகிக்கொள்வதாக, கட்சிக்கு அறிவித்துள்ளார்.
எனினும், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து தான் விலகவில்லை என்றும் அறிவித்துள்ளார். தான், கட்சியின் நுவரெலியா மாவட்ட தலைவராகவும் செயற்குழு உறுப்பினராகவும் தொடர்ந்து செயற்படுவேன் என்றும் அறிவித்துள்ளார்.
கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக பொருத்தமான உறுப்பினரை நியமிக்குமாறும் அவர், அனுப்பியுள்ள கடிதத்தின் ஊடாக கோரியுள்ளார்.
இதுதொடர்பில், கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ள நவீன் திஸாநாயக்க, தனக்கு ஆதரவளித்தமைக்காக ஐ.தே.கவுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago