Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜூலை 15 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் நேற்று (14) 19 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
அவர்களில் 9 பேர் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சேனபுர புனர்வாழ்வு மத்திய நிலையத்திலுள்ள மேலும் நால்வரும் ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாட்டுக்கு வருகை தந்த இருவரும் அடங்குகின்றனர்.
இந்த நிலையில், 16 மாவட்டங்களில் 3,000 இற்கும் மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் தொடர்பு கொண்டிருந்தவர்கள் மற்றும் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தைச் சேர்ந்தோரின் குடும்ப உறுப்பினர்களே இவ்வாறு சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கம்பஹா, பொலன்னறுவை, காலி, கொழும்பு, இரத்தினபுரி, குருநாகல், களுத்துறை, கண்டி, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சிலர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், மொனராகலை, கேகாலை, ஹம்பாந்தோட்டை, புத்தளம், மாத்தறை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சிலரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரை 2,665 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
அவர்களில்1,988 பேர் குணமடைந்துள்ளதுடன், 666 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago