Editorial / 2020 ஓகஸ்ட் 18 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தகுதிவாய்ந்த பட்டதாரிகளுக்கு அவர்களின் பாடத்திட்டங்களுடன் தொடர்புபட்ட துறைகளில் பணிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள 150,000 பேருக்கான தொழில்வாய்ப்பு திட்டம் குறித்து ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிலும் வறுமைக் கோட்டின் கீழுள்ள பொருத்தமானவர்களை இதற்காக தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், அரச சேவையிலுள்ள பலவீனங்களையும் குறைபாடுகளையும் நிவர்த்திக்கும் வகையில் தொழிற்பயிற்சி அளிக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் வகையில், புதிய நியமனங்களை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago