2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

’பதவி விலகல் கடிதம்’ போலியானது

Freelancer   / 2022 ஜூலை 15 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் என சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் ஆவணம் போலியானது என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சிங்கப்பூரிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவி விலகல் கடிதத்தை இலங்கைக்கான சிங்கப்பூர் தூதரகம் ஊடாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், குறித்த கடிதத்தின் சட்டரீதியான செல்லுபடியாகும் தன்மை குறித்து ஆராய்வதாகவும், இது தொடர்பில் இன்று  சபாநாயகர் விசேட அறிக்கையொன்றை வெளியிடுவார் எனவும் சபாநாயகர் அலுவலகம் அறிவித்தது.

எவ்வாறாயினும், ஜனாதிபதி அனுப்பியுள்ள கடிதம் இதுவரையில் சபாநாயகரினால் பகிரங்கமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X