Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 01 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை தேர்தல் தொகுதியில் நாகந்தலாவ மலபத்தாவ எனுமிடத்தில் வீடொன்றின் மீது மண்சரிவில் சிக்குண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் தந்தை மகன் மற்றும் மகள் ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
வலப்பனை பொலிஸ் பிரதேசத்திற்கு உட்பட்ட வலப்பனை பதியபெலல்ல பிரதான வீதிக்கு அருகில் நாரந்தலாவ மலபத்தாவ எனுமிடத்தில் பிரதான வீதியுடனான பாரிய மண்மேடு சரிவு (30) இரவு 8.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
நாரந்தலாவை பகுதியில் பிரதான வீதிக்கு கீழ் பகுதியில் அமைந்திருந்த இரண்டு வீடுகள் மீது மண் மற்றும் பாரிய கற்கள் இதன்போது சரிந்து மூடியுள்ளன.
இதன்போது, ஒரே வீட்டில் வசித்து வந்த 50, 48,17,மற்றும் 18 வயதுடைய தந்தை, தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் மண்ணில் புதையுண்ட நிலையில் சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளனர்.
சடலமான மீட்கப்பட்ட மாணவன் நாளைய தினம் கல்விப் பொதுத் தாராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை எழுத தயாகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .