2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பின்லாந்தின் வணிக நிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு

Editorial   / 2017 ஒக்டோபர் 09 , பி.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பின்லாந்திலுள்ள வணிக நிறுவனங்கள், இலங்கைக்கு வருகை தருவதன் ஊடாக, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை, சக்திமிக்கதாகவும் அர்த்தமுடையதாகவும் அமைத்துக்கொள்ள முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (09) தெரிவித்துள்ளார்.

பின்லாந்துக்கு உத்தியகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்நாட்டிலுள்ள பிரதான மூன்று வர்த்தக நிறுவனங்களின் உயரதிகாரிகளுடன் ஹெல்சிங்கி நகரில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது கருத்து வௌியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வெவ்வேறு தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள அந்நிறுவனங்களின் தலைவர்கள்,  இலங்கையில் முதலீடு செய்வதற்கான சாதகமான வழிமுறைகள் குறித்து பிரதமரிடம் கலந்தோலோசித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .